போஸ் வெங்கட் இயக்கும் புதிய ஸ்போர்ட்ஸ் டிராமா – இசையில் யுவன் ஷங்கர் ராஜா!
‘கன்னிமாடம்’, ‘சார்’ ஆகிய படங்களை இயக்கிய போஸ் வெங்கட், தனது அடுத்த படத்தை ஸ்போர்ட்ஸ் டிராமா வகையில் உருவாக்கவுள்ளார்.
இப்படத்தை கண்ணன் ரவி மற்றும் வி.மதியழகன் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளனர். இது, கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகும் 7வது படம் ஆகும்.
போஸ் வெங்கட் தற்போது கதையை முடித்து, நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழுவைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைக்கவுள்ளார்.
விளையாட்டு, காதல், குடும்பம், சமூகம் போன்ற பல அம்சங்களை ஒன்றாக இணைத்து பேசவிருக்கும் இந்த படம், உணர்ச்சி கலந்த ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் குறித்து போஸ் வெங்கட் கூறியதாவது:
“விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூக மதிப்புகள் ஆகியவற்றை சுவாரஸ்யமாக சொல்லும். யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இப்படம் என் தொழில்நுட்ப பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.