காசா அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப், நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி – வாழ்த்து தெரிவித்தார்

Date:

காசா அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப், நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி – வாழ்த்து தெரிவித்தார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த காசா அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரண்டும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், காசாவில் முதற்கட்ட தற்காலிக போர்நிறுத்தம் அமலாக உள்ளது.

இந்த ஒப்பந்தத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். பின்னர் அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டதாவது:

“எனது நண்பர் அதிபர் ட்ரம்ப்பிடம் பேசி, வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றிக்காக வாழ்த்தினேன். வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்தோம். வரும் வாரங்களில் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டோம்.”

அதேபோல், மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

“அதிபர் ட்ரம்ப்பின் காசா அமைதி ஒப்பந்தத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி அளிக்கும் முயற்சியை ஆதரிக்கிறோம். எந்த வடிவிலோ, எந்த வெளிப்பாட்டிலோ பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினோம்,” என மோடி தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி திட்டம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ட்ரம்ப் 20 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

  • காசா மீண்டும் கட்டி எழுப்பப்படும்.
  • தீவிரவாதம் முற்றிலும் அகற்றப்படும்.
  • ஹமாஸ் குழுவின் பிடியில் உள்ள பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவர்.
  • உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படும்.
  • காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறும்.
  • ஹமாஸ் குழுவினர் ஆயுதங்களை கைவிட்டு, வெளிநாடுகளில் குடியேறலாம்.
  • ஹமாஸ் தலைவர்கள் இல்லாத புதிய உள்ளூர் நிர்வாகக் குழு அமைக்கப்படும்.
  • அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச குழுவின் மேற்பார்வையில் காசா நிர்வகிக்கப்படும்.
  • காசாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு, முதலீடும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கப்படும்.
  • சர்வதேச அமைதி படை (ISF) பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும்.

இந்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும், ஹமாஸும் இணக்கம் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நடுக்கடலில் கவிழ்ந்த பைப்பர் படகு : உயிர் தப்பிய 4 மீனவர்கள்

நடுக்கடலில் கவிழ்ந்த பைப்பர் படகு : உயிர் தப்பிய 4 மீனவர்கள் நாகப்பட்டினம்...

செய்தியாளர்களின் கேள்வியால் எரிச்சலடைந்த யோகி பாபு : கடுமையான பதில்

செய்தியாளர்களின் கேள்வியால் எரிச்சலடைந்த யோகி பாபு : கடுமையான பதில் திரைப்பட விளம்பர...

இமயமலையின் ஆழத்தில் மறைந்துள்ள அணுசக்தி கருவி : நீங்காத கதிர்வீச்சு அச்சம்

இமயமலையின் ஆழத்தில் மறைந்துள்ள அணுசக்தி கருவி : நீங்காத கதிர்வீச்சு அச்சம் சுமார்...

1971-ல் பாகிஸ்தானை முழுமையாக தோற்கடித்த இந்தியா : ‘விஜய் திவஸ்’ உருவான பின்னணி

1971-ல் பாகிஸ்தானை முழுமையாக தோற்கடித்த இந்தியா : ‘விஜய் திவஸ்’ உருவான...