உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீண்டும் செயல்பட ஜப்பான் முடிவு
உலகிலேயே மிகப்பெரிய அணுமின் உற்பத்தி மையமாகக் கருதப்படும் காஷிவாஸாகி–கரிவா அணுமின் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது.
ஜப்பானின் நிகாட்டா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அணுமின் நிலையம், மொத்தமாக 8,212 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, இந்த நிலையம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கான தீர்மானத்திற்கு நிகாட்டா மாகாண சட்டமன்றம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில், முதல் கட்டமாக அணுமின் நிலையத்தின் 6வது அணு உலை, அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் மீண்டும் செயல்பட தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.