பாலைவனத்தில் சீறிப் பாய்ந்த கார்கள் – காந்தஹாரில் டெசர்ட் சஃபாரி உற்சாகம்
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் பாலைவனப் பகுதியில் நடைபெற்ற டெசர்ட் சஃபாரி நிகழ்ச்சியை பொதுமக்கள் திரளாகக் கண்டு களித்தனர்.
வளைகுடா நாடுகளில் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்வாக விளங்கும் டெசர்ட் சஃபாரி, உலகின் பல பாலைவனப் பகுதிகளிலும் மக்கள் விரும்பும் நிகழ்ச்சியாக உள்ளது.
மணல் மேடுகளில் மிகுந்த வேகத்தில் பாயும் கார்களை நேரில் பார்ப்பதற்காக கார் ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் கூடுவது வழக்கமாகும்.
அதேபோல், ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள காந்தஹார் பாலைவனத்திலும் டெசர்ட் சஃபாரி ஒரு திருவிழா போல் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது, மணல் குன்றுகளில் கார்கள் அதிவேகமாக ஓட்டப்பட்டு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. இதனைப் பார்த்த மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.
இரவு நேரம் வரை நீடித்த இந்த டெசர்ட் சஃபாரி நிகழ்ச்சியில், வாணவேடிக்கைகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.