அஜித் படத்தில் அழைப்பு வந்தால் உறுதியாக நடிப்பேன் – விக்ரம் பிரபு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தால் தயங்காமல் நடிப்பேன் என நடிகர் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், ‘டாணாக்காரன்’ புகழ் இயக்குநர் தமிழின் கதை அமைப்பில் உருவாகியுள்ள ‘சிறை’ திரைப்படம் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதையடுத்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் விக்ரம் பிரபு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், திரைப்படத் துறையில் வர்த்தகம் முக்கியமான அம்சமாக இருந்தாலும், கலைக்கு முதன்மை கொடுக்கப்பட வேண்டும் என்றும், உண்மையான கலை வெளிப்பட்டால் வியாபாரம் தானாகவே அதனைத் தொடரும் என்றும் கருத்து தெரிவித்தார்.
மேலும், தற்போதைய காலத்தில் ரசிகர்களின் ரசனை மாற்றம் அடைந்து வருவதாகவும், வாழ்வியலை பிரதிபலிக்கும் கதைகளை கொண்ட படங்களே மக்களால் அதிகம் வரவேற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரனின் அணுகுமுறையைப் பாராட்டிய விக்ரம் பிரபு, அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைவேன் என்றும், அவர் கேட்டால் சிறப்பு தோற்றத்தில் கூட நடிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.