உள்நாட்டு எதிர்ப்பின் மத்தியில் சிக்கலில் அசிம் முனீர்
காசா பகுதிக்கு பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வலியுறுத்தலால், பாகிஸ்தானில் கடும் உள்நாட்டு எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனால், பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசிம் முனீர் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் தலையீட்டின் விளைவாக இஸ்ரேல் மற்றும் காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதனை அமல்படுத்தும் நடவடிக்கையாக சில இஸ்லாமிய நாடுகள் தங்கள் படைகளை காசாவுக்கு அனுப்ப வேண்டும் என ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த அழுத்தத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானும் தனது படைகளை காசாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இதை ஹமாஸ் அமைப்பை பலவீனப்படுத்தும் முயற்சியாக மக்கள் கருதுவதால், பாகிஸ்தான் ராணுவம் காசாவுக்கு செல்லக் கூடாது என அந்நாட்டு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த எதிர்ப்புகளின் காரணமாக, இந்த விவகாரத்தில் எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பத்தில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் தவித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.